கோவிட் தொற்று இரண்டாவது அலை குறித்து மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் அறிக்கை – மே 2021

நாடு ஒரு மோசமான சூழலை கடந்து கொண்டிருக்கின்றது. பல நகரங்களில் நோயாளிகள் மருத்துவ மனைகளில் படுக்கை வசதியும், ஆக்சிஜனும் இதர மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதியுறும் நிலை எழுந்துள்ளது. பரிசோதனை அறிக்கை கிடைப்பது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது அதே நேரம் மயானங்களில் பிணங்களை எரிக்க நெடுநேரம் வரிசையில் நிற்கும் நிலையும் இருக்கின்றது.

இந்த சூழலில் மக்கள் உடல் நலத்திற்காகவும் அதனை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்பதற்காகவும் இயங்கும் அகில இந்திய அளவிலான மக்கள் நல்வாழ்வு இயக்கங்கமும், இதர சமூகநல இயக்கங்களும் மத்திய அரசையும் மற்ற மாநில அரசுகளையும் தங்களின் கடமைகளிலிருந்து பிறழாமல் அவற்றினை மக்களுக்குக்கு அளிக்க கீழ்கண்டவாறு வலியுறுத்துகின்றன.

  • மக்களின் உடல் நலனையும் உயிர்களையும் காப்பாற்றும் முழு பொறுப்பினை அரசுகள் ஏற்கவேண்டும் – இப்போதே!
  • அனைவருக்கும் சுகாதார உரிமை கிடைப்பதையும், நோயைக் கட்டுப்படுத்துவதையும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதையும் உறுதிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடு!

 

Download PDF: MNI_COVID2nd wave_Demandsstatement_release

Scroll to Top