MNI

கோவிட் தொற்று இரண்டாவது அலை குறித்து மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் அறிக்கை – மே 2021

நாடு ஒரு மோசமான சூழலை கடந்து கொண்டிருக்கின்றது. பல நகரங்களில் நோயாளிகள் மருத்துவ மனைகளில் படுக்கை வசதியும், ஆக்சிஜனும் இதர மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதியுறும் நிலை எழுந்துள்ளது. பரிசோதனை அறிக்கை கிடைப்பது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது அதே நேரம் மயானங்களில் பிணங்களை எரிக்க நெடுநேரம் வரிசையில் நிற்கும் நிலையும் இருக்கின்றது. இந்த சூழலில் மக்கள் உடல் நலத்திற்காகவும் அதனை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்பதற்காகவும் இயங்கும் அகில இந்திய அளவிலான மக்கள் நல்வாழ்வு இயக்கங்கமும், இதர சமூகநல இயக்கங்களும் மத்திய அரசையும் மற்ற மாநில அரசுகளையும் தங்களின் கடமைகளிலிருந்து பிறழாமல் அவற்றினை மக்களுக்குக்கு அளிக்க கீழ்கண்டவாறு வலியுறுத்துகின்றன. மக்களின் உடல் நலனையும் உயிர்களையும் காப்பாற்றும் முழு பொறுப்பினை அரசுகள் ஏற்கவேண்டும் – இப்போதே! அனைவருக்கும் சுகாதார உரிமை கிடைப்பதையும், நோயைக் கட்டுப்படுத்துவதையும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதையும் உறுதிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடு!   Download PDF: MNI_COVID2nd wave_Demandsstatement_release

நலவாழ்விற்கான  மக்கள்  நூல் வரிசை 

நலவாழ்விற்கான  மக்கள்  நூல் வரிசை 1 மக்கள் நலவாழ்வு சாசனங்கள், பிரகடனங்கள் பதிவிறக்க: People’s Health Charters_Tamil நலவாழ்விற்கான  மக்கள்  நூல் வரிசை 2 நலவாழ்வும் மனித உரிமைகளும் பதிவிறக்க: நலவாழ்விற்கான  மக்கள்  நூல் வரிசை 3 மாயையான நம்பிக்கை பதிவிறக்க: Blind optimism (Tamil) நலவாழ்விற்கான  மக்கள்  நூல் வரிசை 4 சுகாதார கண்காணிப்பு 1 – வளர்ச்சிக்கான ஒரு மாற்று கருத்தியல் பதிவிறக்க: நலவாழ்விற்கான  மக்கள்  நூல் வரிசை 5 சுகாதார கண்காணிப்பு 2 – வளர்ச்சிக்கான ஒரு மாற்று கருத்தியல் பதிவிறக்க:

மக்கள் நலவாழ்வு கோரிக்கைகள் – 2019

மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் [Peoples Health Movement – India] தமிழ் மாநில அமைப்பின் சார்பாக தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் 2019 மக்கள் நலவாழ்வு கோரிக்கைகள் அனைத்து குடிமக்களுக்குமான அடிப்படை உரிமைகளில் ஒன்றான நலவாழ்வு உரிமைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் நலவாழ்வு நிலை குறியீடுகள் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் பாலின, வர்க்க, சாதி ரீதியாக நிகழும் ஏற்றத்தாழ்வுகளை பல வருடங்களாக நம்மால் குறைக்க இயலவில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான நிதியும், மனிதவளமும் வழங்குவதற்கான அரசியல் உறுதியில்லாத நிலை ஒருபுறம், எந்தவித கட்டுப்பாடும் இன்றி இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சி மறுபுறம் என்பதே தமிழகத்தின் தற்போதைய நிலைமை. உணவு, குடிநீர், இருப்பிடம், வாழ்வாதார உரிமைகளோடு தரமான, முழுமையான, இலவச நலவாழ்வு சேவைகளை வழங்குவதன் மூலமாகவே நலமான தமிழகத்தை கட்ட இயலும். பல்வேறு தரப்பு மக்கள், வல்லுநர்கள், சமூக குழுக்கள் ஆகியோரின் கருத்தறிந்து கீழ்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலவாழ்வு இயக்கம் முன்வைக்கிறது. கோரிக்கைகள்: தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சுதந்திரமான, முழுமையான முறைபடுத்தும் அமைப்பை ஏற்படுத்த ஏற்றவாறு தமிழ்நாடு மருத்துவமனைகள் (திருத்த) முறைபடுத்துதல் சட்டம் 2018 ல் திருத்தம் மேற்கொண்டு உடனடியாக முழுமையாக அமுல்படுத்து. தமிழகம் முமுமைக்குமான ஒரே சேவை கட்டணத்தை நிர்ண்யம் செய்து அமல்படுத்து. மருத்துவ ஆய்வக சேவைகளுக்கான கட்டண கொள்கையை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும் தனியாருக்கு மக்கள் பணத்தை கொண்டு சேர்க்கும் காப்பீட்டு திட்டம் உட்பட அரசு துறையில் அனைத்து தனியார் மயமாக்கலையும் நிறுத்து. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நலவாழ்விற்கான நிதி ஒதுகீட்டை 5%மாக உயர்த்தவும், நலவாழ்வு உரிமைக்கான தேசிய சட்டத்தை நிறைவேற்றவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக வழங்கு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் (ஆசு. நிலையங்கள்) 24மணி நேரமும் மருத்துவரை பணியமர்த்து. ஆசு. நிலையங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணி முதல் 8 மணி வரை இயங்கும் மாலை நேர புறநோயாளிகள் சிகிச்சையை உத்திரவாதப்படுத்து. மேலும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கு. ஆசு. நிலையங்களில் பல்வேறு சிறப்பு பிரிவு மருத்துவ குழுவை பணி அமர்த்து. பொது சுகாதார துறையில் தாய்-சேய் நலசேவைகளை தாண்டி அனைத்து நோய்தடுப்பு மற்றும் நலமேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பாடுகள் சீரமைக்கப்பட வேண்டும். துணை சுகாதார நிலையங்களையும், சேவைகளையும் முழுவதுமாக செயல்படுத்து. மருத்துவ துறையில் உள்ள அனைத்து காலிபணியிடங்களையும் தாமதமின்றி வெளிப்படை தன்மையுடன் நிரப்பவேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனை கல்லூரிகளை தரம் உயர்த்தி அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகளை உருவாக்கவேண்டும். தமிழகத்தில் மருத்துவ கல்வியின் தரம் சீரமைக்கப்படுவதற்காக கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தரமான கல்வி அளிக்கவேண்டும். பகுதி சார்ந்த, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளை அந்தந்த பகுதிகளில் அமைத்திடு. (உம்: கடலூர் ரசாயன ஆலைகள், சிவகாசி – தீக்காயம், தருமபுரி – தலசீமியா, சிக்கல் செல் அனீமியா போன்றவை). அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பொதுபெயரில் மட்டுமே பரிந்துரையில் குறிப்பிடுவதை உறுதி செய்யவேண்டும். நலவாழ்வு சேவைகளில் மக்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை உறுதிசெய்ய கூடிய அதிகாரபூர்வமான வழிமுறைகளை அமுல்படுத்துக. கிராம நலவாழ்வு குழுக்கள், ஆஷா போன்ற திட்டங்களை முழுமையாக, வெளிப்படையாக நடைமுறைபடுத்தி, மருத்துவமனைகளை மக்கள் கண்காணிப்பதை உறுதிசெய். கிராம நலவாழ்வு குழுக்கள் (VHWSNC), பயனாளிகள் நலச்சங்கங்கள் (PWS) திறம்பட செயல்படவும், அவற்றிற்கு வழங்கப்படும் நிதியை வெளிப்படையாக நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலும் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேலாண்மையை உறுதிசெய். வருடாவருடம் அதிகரித்துகொண்டுவரும் கொசுவினால் பரவும் நோய்களை தடுக்கும் விதத்தில் மாவட்ட அளவில் சிறப்பு அலுவலரை பணியமர்த்தி மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு கட்டுபாடு மேற்கொள்ளவேண்டும். இந்திய மருத்துவ முறைக்கு (AYUSH) போதுமான தனி கவனமும், நிதியும் அளித்து வலுப்படுத்தி அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவரும் சேவைகள் தரமானதாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கி முழுமையான மக்கள் பங்கேற்புடன் அம்மையங்களை செயல்படுத்தவேண்டும். இரண்டாம் கட்ட சிகிச்சை பெறும் எச்.ஐ.வி (HIV) நோயாளிகளுக்கு போதுமான மருந்து உட்பட முழுமையான வசதிகளை உறுதிப்படுத்தவேண்டும். மனநல மருத்துவதுக்கு தேவையான வளங்களை அதிகரித்து, ஒருங்கிணைந்த மனநல மருத்துவ திட்டதின் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநல சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும். தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மருத்துவ திட்டத்தின் கீழ் அனைத்து முறைசார தொழிலாளரும் பயன்பெற வழிவகை செய்யவேண்டும். அரசு மருத்துவ துறையில் அனைத்து மட்டங்களிலும் நிலவும் இலஞ்சத்தை அறவே ஒழித்திட நடவடிக்கை எடு. மது இல்லா தமிழகத்தை உருவாக்கவேண்டும். புகையிலை சார்ந்த அனைத்து போதைபொருட்கள், மதுபானங்களை முற்றிலுமாக தடைசெய்ய வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய, உயரிய சிகிச்சை அளிக்கவேண்டும். மறுவாழ்வு சிகிச்சை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். பதிவிறக்க: MNI Election Manifesto2019

தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சபை III

இந்தியாவில் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு மக்காள் நலவாழ்வு சபை III, செப்டம்பர் 15, 2018 அன்று ஈரோடில் உள்ள சீமாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய நிகழ்ச்சித் திரு த.சுரேஷ், உறுப்பினர்-மக்கள் நலவாழ்வு இயக்கம் மற்றும் சோச்சாரா அவரின் அன்பான வரவேற்பு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களிடமிருந்து ஒரு சில பிரதிநிதிகள் சமூக நலவாழ்வு விளக்குகளை ஏற்றி வைத்தனர். தீப்ஸ்-இன் இயக்குனர் திரு.சங்கர் அன்றைய நிகழ்ச்சிக்கு அடிநாதமாக தொடக்க உரையை வழங்கினார். பின்னர்,  ‘தோஷி தமிழ்நாடு’ பற்றி பேசினார். ‘ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் ‘தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு’ நிறுவனர் திரு கே.சண்முக வேலாயுதம் பேசினார். ரூசக் (RUWSEC) இன் இயக்குனர் திரு. பாலசுப்பிரமணியம், ‘பெண்களின் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார். திரு, அமீர்கான் மாநில, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற ‘தேசிய மக்கள் நலவாழ்வு சபை’ – தேசிய சுகாதார சபையின் வரலாறு மற்றும் பங்கேற்பை வழங்கினார்.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 2018 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ குறித்த 3 வது தேசிய மக்கள் நலவாழ்வு சபை மாநாடு குறித்து பேசினார். அடுத்து தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரு கமலா கண்ணன், உறுப்பினர் – தொனி அமைப்பு, நன்றியை முன்மொழிந்தார். நிகழ்ச்சியை ஒழுங்காக ஏற்பாடு செய்த குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் அனைவரையும் அவர்களின் வருகைக்காகவும், உற்சாகமாக பங்கேற்றதற்காகவும் அவர் பாராட்டினார் மற்றும் நன்றி தெரிவித்தார். குழு-புகைப்பட அமர்வுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் அனைவரும் தேனீருடன் தங்களை புதுப்பித்தபின் கலைந்து சென்றனர். தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சபை III_அறிக்கை TNHA3_Final Report

மக்கள் நலவாழ்வு இயக்க உறுப்பினர்கள், தொடர்புகள்

மாநில குழு உறுப்பினர்கள்: தருமபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு – Dharmapuri District Health Voluntary Organisation Network Initiative சமூக நலவாழ்வு, விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான அமைப்பு – Society for Community Health Awareness Research and Action தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – Tamil Nadu Science Forum புதுவை அறிவியல் இயக்கம் – Pondicherry Science Forum தமிழ்நாடு போர்சஸ் – TNFORCES தமிழ்நாடு கத்தோலிக்க நலவாழ்வு சங்கம் – Catholic Health Association of Tamil Nadu தமிழ்நாடு தன்னார்வ நலவாழ்வு சங்கம் – Tamil Nadu Voluntary Health Association கன்னியகுமரி மாவட்ட தன்னார்வ நலவாழ்வு குழுமம் – Voluntary Health Association of Kanniyakumari தோழி கூட்டமைப்பு – தமிழ்நாடு – THOZHI Network, Tamilnadu குழந்தை உரிமைகள் மற்றும் தாங்கள் – Child Rights and You தி. அருள்செல்வி சமூக புணர்வாழ்வு கூட்டமைப்பு – D. Arulselvi Community based Rehabilitation மாவட்ட அமைப்புகள்: சென்னை வேலூர் திருப்பத்தூர் தருமபுரி திருச்சி பெரம்பலூர் திருவண்ணாமலை மதுரை தேனி சேலம் திருநெல்வேலி இராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் கரூர் கோயமுத்தூர் கடலூர் செங்கல்பட்டு கன்னியாகுமரி   மாவட்ட அமைப்பு தேவை கிருஷ்ணகிரி ராணிபேட்டை திருவள்ளூர் திருவாரூர் நாகபட்டினம் விழுப்புரம் காஞ்சிபுரம் தூத்துகுடி சிவகங்கை நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் விருதுநகர் அரியலூர் ஈரோடு கள்ளகுறிச்சி நாமக்கல் தொடர்பு கொள்க: மக்கள் நலவாழ்வு இயக்க செயலகம் எண் 18/7, ரத்தினபுரி, கோயம்பேடு, சென்னை – 600107, தமிழ்நாடு தொலைபேசி: 044 – 2479 6638 மின்னஞ்சல்: mnisecretariate@gmail.com தொடர்பு: அமீர்கான் 9443282718/9123563070, சுரேஷ் – 9840511638/7010585458

மக்கள் நலவாழ்வு இயக்க பணிகள் – MNI

மருத்துவ வசதிகள் வானளாவிய வளர்ச்சியை அடைந்துள்ள நிலையிலும் எளிதாக தடுக்கப்படக்கூடிய நோய்களால் இலட்சக்கணக்கான குழந்தைகள், தாய்மார்கள் இறப்பது மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஏழ்மை பெருகுவதும், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருவதும், பொது சுகாதார அமைப்புகள் வலுவிழந்து வருவதுமே இந்த இறப்புகளுக்கு காரணமாக இருக்க முடியும். இச்சூழலிலேயே மக்கள் நலவாழ்வு இயக்கமானது தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு முயற்சிகளையும், போராட்டங்களையும் முன்னிறுத்தி நடத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான சில: கடந்த ஆண்டுகளில்: 2000-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுச் சுகாதார அமைப்புகள் மீதான அய்வு; முதல் மாநில மக்கள் நலவாழ்வு சபை சென்னையிலும், தேசிய நலவாழ்வு சபை கொல்கத்தாவிலும் நடத்தியது; தேசிய நலவாழ்வு கொள்கை 2000த்தின் மீது விரிவான அறிக்கை; 2004ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து பொதுச் சுகாதார அமைப்புகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பொது விசாரணை நடத்தியது; 8 மாநிலங்களில் மக்கள் நலவாழ்வு கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி பொதுச் சுகாதார அமைப்புகளை தொடர்ச்சியாக கண்காணிப்பது; 2006ஆம் ஆண்டு பெண்களும் ஆரோக்கியமும் குறித்து சர்வதேச மாநாடு நடத்தியது; 2007ஆம் ஆண்டு இரண்டாவது மாநில மக்கள் நலவாழ்வு சபை சென்னையிலும், தேசிய நலவாழ்வு சபை போபால் நகரிலும் நடத்தியது; தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம் குறித்த ஆய்வறிக்கை சமர்பித்தது; 2007ஆம் ஆண்டு முதல் மக்கள் கண்காணிப்பு மற்றும் திட்டமிடலுக்காக குழுக்களை அமைப்பதில் பங்கு வகிப்பது; தமிழகத்தில் இத்திட்டத்திற்கு பல முன்மாதிரிகளை வடிவமைத்து அளித்தது. இத்திட்டம் “நலவாழ்விற்கான மக்கள் செயல்பாடு” என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தடுப்பூசி சேவைகள் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து பிரச்சாரம், ஆய்வு நடத்தியது; 2008ஆம் ஆண்டு மூன்று பொதுத்துறை நோய்த்தடுப்பு மருந்து நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பலமுறை போராட்டம் நடத்தியது ஆகியன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். 2013 காப்பீடு திட்டம், மருத்துவமனை சார் பிரசவம் மற்றும் தடுபூசி திட்டம் ஆகிய 3ஐக்கான பிரச்சாரத்தை நடத்தியது. 2015ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்துடன் மீண்டும் இணைந்து தனியார்/பொதுச் சுகாதார அமைப்புகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பொது விசாரணையை மும்பையில் நடத்தியது; 2017 முதல் அரசு நலவாழ்வு சேவைகளை தனியார் மயமாக்கலுக்கும், கட்டற்ற வணிகமயமாக்கலுக்கும் எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகிறது. 2017 மருத்துவ நிறுவனங்கள் முறைபடுத்துதல் சட்டம் – இயற்றவும், அதன் 2018 முதல் செயலாக்கத்தை கண்காணிக்கவும் செய்கிறது. 2018ல் 3வது தமிழக நலவாழ்வு சபையை ஈரோடு மாவட்டத்தில் நடத்தியது. தொடர்ந்து ராய்பூரில் தேசிய நலவாழ்வு சபையிலும், சவாரில் 4வது மக்கள் நலவாழ்வு சபையிலும் பங்காற்றியது.   மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தவிர்த்து குறிப்பாக தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஆங்கன்வாடி மையம், பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தது போன்றவை குறிப்பிட தகுந்த முயற்சிகளாகும். நலவாழ்வை மக்கள் கையில் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நலவாழ்வு இயக்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மக்களால் அமைக்கப்படும் குழு நலவாழ்வு சேவைகளை கண்காணித்து நலவாழ்வு திட்டங்களை தீட்டுவதற்கு அடித்தளமிடும் முயற்சியில் மக்கள் நலவாழ்வு இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக நிகழாண்டு நிகழ்வுகள் 2017 மருத்துவ நிறுவனங்கள் முறைபடுத்துதல் சட்டம் –  செயலாக்கத்தை கண்காணித்தல். 2019 நலவாழ்வு பயனாளிகள் (நோயாளிகள்) உரிமைக்கான பரப்புரை மற்றும் கள ஆய்வை மேற்கொள்வது. ஒருங்கிணைப்போம்! அனைவருக்கும் நலவாழ்வை நிலைநாட்டுவோம்!!    

மக்கள் நலவாழ்வு இயக்கம் – MNI

ஜன சுவாஸ்திய அபியான் – தமிழ்நாடு அமைப்பு அறிமுகம் இரண்டாயிரமாவது ஆண்டிற்குள் அனைவருக்கும் நலவாழ்வை உத்திரவாதப்படுத்துவோம் என்ற உலக நாடுகளின் கூற்று பொய்த்துப்போனது. நலவாழ்வை மேம்படுத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் அரசாங்கங்கள் மேற்கொள்ள தயாராக இல்லாத அன்றைய சூழலில் குடிமைச் சமூகத்தைச் சார்ந்த சுமார் 1800 பேர் பங்களாதேஷ் நாட்டில் உள்ள சவார் என்னுமிடத்தில் 2000ஆம் ஆண்டு ஒன்றுகூடி முதல் மக்கள் நலவாழ்வு சபையை நடத்தினர். பல ஆண்டுகளாக மக்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட, மக்களின் நலவாழ்வு உரிமையை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிற பல்வேறு அமைப்புகளின் முன்முயற்சியால் இச்சபையானது கூட்டப்பட்டது. இச்சபை கூடுவதற்கு முன்னால் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டிற்கான தேசிய நலவாழ்வு சபைகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் தேசிய நலவாழ்வு சபையானது 2000ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் கூட்டப்பட்டது. இச்சபைக்கான முன் தயாரிப்புகள் சுமார் இரண்டு வருடங்கள் நடைபெற்றது. இந்த முன் தயாரிப்புகள் மக்களை ஒன்று திரட்டுவதில் தொடங்கி மக்களின் நலவாழ்வு உரிமைகள், சுகாதார நிலைமைகள், சுகாதார அமைப்புகளின் நிலைகள் குறித்து மக்கள் மன்றத்தில் விவாதித்து மக்களின் தேவைகள் மக்கள் சாசனங்களாக வெளியிடப்படும் வரை தொடர்ந்தன. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இச்சபையில் பல்வேறு மக்கள் நலவாழ்வு பிரச்சனைகளை விவாதித்ததின் அடிப்படையில் அனைவருக்கும் நலவாழ்வு என்பதை அடைவதற்கு உலக மக்கள் ஒன்றுகூடி தங்கள் தேவையையும் விருப்பத்தையும் வலியுறுத்துவது மிக அவசியம் என்பது உணரப்பட்டது. சவாரில் கூடிய இச்சபையின் முடிவில் ‘பீப்பிள்ஸ் ஹெல்த் மூவ்மெண்ட்’ (Peoples Health Movement – PHM) எனும் உலகளாவிலான மாபெரும் இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் இந்திய அமைப்பு இந்தி மொழியில் ‘ஜன சுவஸ்திய அபியான்’ (Jana Swasthiya Abiyan – JSA) எனவும், தமிழக அமைப்பு, ‘மக்கள் நலவாழ்வு இயக்கம்’ (MNI) எனவும் அழைக்கப்படுகிறது. 22 தேசிய கூட்டமைப்புகளை தற்பொழுது உறுப்பினர்களாக கொண்டுள்ள இவ்வியக்கம் மக்கள் நலவாழ்வு மற்றும் சமச்சீரான வளர்ச்சியை நிலை நாட்டுவதிலும், நலவாழ்வை தீர்மானிக்கக்கூடிய காரணிகளை மேம்படுத்துவதையும் முதன்மை குறிக்கோள்களாக செயல்பட்டு வருகிறது. ‘அனைவருக்கும் நலவாழ்வு – இப்பொழுதே!’ எனும் முழக்கத்தில் நம்பிக்கையுள்ள, அதற்காக பாடுபடுகிற தனிநபர்கள், மக்கள் அமைப்புகள், மக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதன் உறுப்பினர்களாவர். செயலகம்: எண் 18/7, ரத்தினபுரி, கோயம்பேடு, சென்னை – 600107, தமிழ்நாடு தொலைபேசி: 044 – 2479 6638 மின்னஞ்சல்: mnisecretariate@gmail.com தொடர்பு: அமீர்கான் 9443282718/9123563070, சுரேஷ் – 9840511638/7010585458 மேலும் வாசிக்க: People’s health movement ஜன சுவாஸ்திய அபியான்

Scroll to Top